Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvAFG : போராடிய ரஷீத்…… 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா…!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை  சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்ததால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  கடைசி கட்டத்தில் ரசித் கான் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த போதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் போராடி தோல்வியடைந்தது.

தற்போது -0.173 ரன்ரேட்டில் ஆஸ்திரேலியா உள்ள நிலையில், இங்கிலாந்து பிளஸ் +0.547 ரன்ரேட்டில் உள்ளது. நாளை இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வீட்டிற்கு செல்லும்..

Categories

Tech |