Categories
டென்னிஸ் விளையாட்டு

“வைல்ட் கார்ட் வேண்டாம்”… ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய “முர்ரே”… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டின் பிப்ரவரி 8ம் தேதி டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக பிரிட்டன்  டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவுக்கு வைல்ட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மெயின் டிராவில் விளையாடும் வாய்ப்பு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இவருக்கு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் 5 முறை இரண்டாவது இடத்தை பெற்றுள்ள முர்ரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கயிருந்தார். இந்நிலையில் ஆண்டி முர்ரேவுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இதனால் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வைல்ட் கார்டை பயன்படுத்தப் போவது இல்லை என்று முடிவு செய்துள்ளார். மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆண்டி முர்ரே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

Categories

Tech |