Categories
உலக செய்திகள்

262 நாட்களுக்கு பிறகு ரத்து…. சலூன் கடைகளில் முன்பதிவு…. பிரபல நாட்டில் மக்கள் மகிழ்ச்சி….!!

262 நாட்களுக்குப் பிறகு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதால் மெல்போர்ன் மக்கள் தெருக்களில் ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர்.

கொரோனா பரவலால் ஆஸ்திரேலியா நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் 1590 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இருந்தபோதிலும் அங்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகரான மெல்போர்ன் நகரில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த பொது முடக்கமானது முதலாவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டது. பின்னர் இடையில் அதை ரத்து செய்த போதிலும் மீண்டும் பொது முடக்கமானது அறிவிக்கப்பட்டது. இந்த பொது முடக்கம் 262 நாட்கள் நீடித்தது. இதனால் மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.

மேலும் அவர்களுடைய பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். இதனை அடுத்து சுமார் 262 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு பொது முடக்கத்தை நேற்று முன்தினம் ரத்து செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பொது மக்கள் தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்தப் பொது முடக்கத்தினால் சலூன் கடைகள் மூடப்பட்திருந்ததால் பலர் தங்களது முடியை வெட்டாமல் வைத்திருந்தனர்.

இதனால் பொது முடக்கம் ரத்து செய்யப்பட்ட உடன் அனைவரும் நீளமான முடியோடும் சலூன் கடையை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் சலூன் கடைகளில் கூட்டம் அலை மோதியுள்ளது. மேலும் பல சலூன் கடைகளில் முடி வெட்டுவதற்கு முன்பதிவு நடந்துள்ளது. இதுகுறித்து சலூன் கடை நடத்தும் ஒருவர் கூறியதாவது “நவம்பர் மாதம் இறுதி வரை எனது கடையில் முன்பதிவு முடிந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |