ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கல்வித்துறை அமைச்சர் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை பதவி விலக அறிவுறுத்தியுள்ளார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலால் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் ஊழியரான ரச்சேல் மில்லர், கல்வித்துறை அமைச்சர் ஆலன் டட்ஜுடன் கடந்த 2017-ல் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது தன்னை இடுப்பில் எட்டி உதைத்தாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதையடுத்து பிரதமர் ஸ்காட் மோரிசன் அந்த அமைச்சரை தற்காலிகமாக பதவி விலகுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் பிறகு பிரதமர் ஸ்காட் மோரிசன் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆலன் டட்ஜுடன் தனது அறிவுறுத்தலின் பேரில் பதவியை விட்டு விலகியதாக தெரிவித்துள்ளார்.