ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன், ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் தான் ‘அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் நல்ல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் டிக்டாக்கில் #buttabomma என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, சாதாரண பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை, இப்பாடலுக்கு டிக் டாக் நடனம் ஆடி அசத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், தனது மனைவியுடன் சேர்ந்து ‘புட்ட பொம்மா புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர்களது குழந்தையும் நடனமாடும் போது சிரித்துக்கொண்டே பின்னாடி நடந்து செல்கிறது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டேவிட் வார்னர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
https://www.instagram.com/p/B_mINrppW7d/?utm_source=ig_web_button_share_sheet
இவரது இந்த வீடியோவைப் பார்த்த அல்லு அர்ஜூன் டேவிட் வார்னருக்கு ட்விட்டர் மூலமாக நன்றி தெரிவித்தார். அதற்கு டேவிட் வார்னரும் பதிலுக்கு ’நன்றி சார். மிக அருமையான பாடல்’ என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக வார்னர் தனது மகள் ஐவி மேவுடன் இணைந்து, பிரபல பாலிவுட் பாடலான ‘ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you sir amazing song 👍👍 @alluarjun https://t.co/gemwv8n3ft
— David Warner (@davidwarner31) April 30, 2020