காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து டோமினிக் திம் விலகினார் .
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் உலகின் முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்கின்றன .இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகின்றது .இப்போட்டி தொடங்குவதற்கு 3 வாரங்களே உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ், பெலிண்டா பென்சிக் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டென்னிஸ் நட்சத்திர வீரரான ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த டோமினிக் திம் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் . இந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிசில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.