ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார் .
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்னும் , ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 267 ரன்னும் குவித்தது. இதன்பிறகு 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.இதில் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்னில் சுருண்டது .இதன் பிறகு 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது .இறுதியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்களில் தோல்வி அடைந்தது .
இந்நிலையில் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறும்போது,” இந்தக் கொரோனா தொற்று காலத்திலும் நாங்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றோம். அதேசமயம் தொடர்ந்து முன்னோக்கி செல்ல முயன்று வருகின்றோம் .மேலும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி எங்களை தூசி மாதிரி ஊதித் தள்ளிவிட்டார்கள். இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அதே சமயம் நாங்கள் மைதானத்தில் ஆடிய விதம் ,ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்த விதம் சிறப்பாக தான் இருந்தது .அதேபோல் டெஸ்ட் போட்டியில் எந்த மாதிரியான நெருக்கடியை கொடுக்க வேண்டுமோ அதுபோல் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடிகொடுத்தோம். இந்நிலையில் எங்கள் பலவீனத்தை நாங்கள் அறிந்து அதை மேம்படுத்த முயற்சிப்போம். அடுத்த 2 போட்டிகளிலும் வலிமையாக திரும்பும் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.