ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஹேசில்வுட் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் .
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனிடையே இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹேசில்வுட்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர்2- வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ரிச்சர்ட்சன் அல்லது மைக்கேல் நெசர் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.