ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 4-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 4-ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி மற்றும் ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு பதிலாக இப்திகர் அகமது, முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.