Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : நாடு திரும்பும் ஜோஸ் பட்லர் ….! காரணம் என்ன ….?

இங்கிலாந்து விக்கெட் கீப்பர்  ஜோஸ் பட்லருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் 2-வது நாள் ஆட்டத்தின்போது பந்து தாக்கியதில் காயம் அடைந்தார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இருந்தாலும் அவர் வலியை தாங்கிக் கொண்டுதான் இரண்டாவது இன்னிங்சை விளையாடினார்.

இந்நிலையில் அவருடைய காயம் மோசமாக இருப்பதால் உடனடியாக அவர் நாடு திரும்ப இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக ஜானி பேர்ஸ்டோவும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், கடைசி டெஸ்ட் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிகின்றது.

Categories

Tech |