ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது .
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னும், ஆஸ்திரேலிய அணி 267 ரன்னும் குவித்தது. இதனால் 82 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தது .இதன் பிறகு இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்னில் சுருண்டது .இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது .இதில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 68 ரன்னில் சுருண்டது .இதனால் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் அசத்தலாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் 2-வது இன்னிங்சில் 4 ஓவர் வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .மேலும் இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.