Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …! 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது . இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது .இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு  236 ரன்னில் சுருண்டது .

இதைதொடர்ந்து  2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது .இதனால் 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய இங்கிலாந்து அணிஅனைத்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |