மாமனார், மாமியாரை அரிவாள்மனையால் தாக்கி மருமகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாசார்பட்டி பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சுப்புலட்சுமி மதுரை மாவட்டம் மேல வெளி வீதியில் உள்ள தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் கூறி உள்ளார். இதனால் சுப்புலட்சுமியின் பெற்றோரான பாண்டியும், பஞ்சவர்ணமும் மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்துள்ளனர்.
அந்த சமயம் பேசிக் கொண்டிருக்கும் போதே, கோபம் அடைந்த மணிகண்டன் தனது வீட்டிலிருந்த அரிவாள்மனையால் அவரது மாமனார் மற்றும் மாமியாரை தாக்கியதோடு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.