Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் மறைவை கொண்டாடிய பெண் மீது தாக்குதல்…. வெளியான வீடியோ….!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை கொண்டாடிய பெண் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் கடந்த 8-ஆம் தேதி அன்று மரணமடைந்தார். நாட்டு மக்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் சுமார் 10 தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், ஸ்காட்லாந்து நாட்டில், ஈஸ்டர் ரோஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலின் உரிமையாளரான ஜகி பிக்கெட் என்ற பெண், மகாராணியாரின் மறைவை மதுபாட்டிலுடன் கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவை முகநூல் பக்கத்திலும் வெளியிட்டார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, அந்த பெண்ணிற்கு கண்டனங்கள் எழுந்தன.

எனவே, காவல்துறையினர் பாதுகாப்பிற்காக ஓட்டலை அடைத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதன் பிறகு, ஓட்டலை அடைத்து விட்டு காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏறி, வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்த பெண்ணின் மீது சிலர் கற்களை வீசி எறிந்தனர்.

அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து அவரின் ஓட்டலுக்கு சென்ற சிலர், கற்களை வீசி கண்ணாடியை உடைத்தார்கள். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |