Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் சுதந்திரதின விழாவில்…. கத்திக்குத்து தாக்குதல்…. மூவர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் நாட்டின் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டில் நேற்று 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எனவே, அந்நாட்டு மக்கள் அனைவரும் நாடு முழுக்க பல பகுதிகளில் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் எலட் நகரத்தில் இருக்கும் பூங்காவில் நேற்று இரவு நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது திடீரென்று பயங்கரவாதிகள் இருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார்கள். காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |