Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் வன்முறை…. சூறையாடப்பட்ட இந்துக்களின் வீடு, கடைகள்…. மர்ம கும்பல் வெறிச்செயல்….!!!

வங்காளதேசத்தில் இந்துக்களின் குடியிருப்புகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் அவர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது மதச்சார்பில்லாத நாட்டில் இவ்வாறான வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாதது என்று கூறியிருக்கிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வங்காள தேசத்தின் லோஹகரா என்னும் நகரத்தில் உள்ள இந்துக்கள் வாழும் குடியிருப்புகளில் சிலர் தீ வைத்துள்ளனர். முகநூல் தளத்தில் 18 வயதுடைய ஒரு இளைஞர் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி வெள்ளிக்கிழமை அன்று பிரார்த்தனையை முடித்துவிட்டு சிலர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்னும் இளைஞர் சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அவரை கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடக்கிறது. அப்போது ஆகாஷ் அவரின் வீட்டில் இல்லாததால் இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத நபர்களின் குடியிருப்பின் மேல் தீ வைத்திருக்கிறார்கள்.

இது பற்றி ஒரு பெண் தெரிவித்ததாவது, மர்ம நபர்கள் திடீரென்று குடியிருப்புக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றனர். அதனைத்தொடர்ந்து மேலும் சில நபர்கள் வந்து வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள். இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த கலவரம் நீடிக்கும் என்று தெரியவில்லை. எங்களுக்கு நீதி யார் தருவது? பாதுகாப்பு யார் தருவது என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |