மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு போயிருந்த சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுகாதார பணியாளர்கள் டட்பதி பாகல் பகுதிக்கு சென்ற போது அவர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதார பணியாளர்கள், அலறியடித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை செய்ய போன இடத்தில் சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.