நாட்டில் சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் பழக வேண்டும்.. ஆனால் ஒரு சிலர் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரித்து பார்க்கின்றனர். சில இடங்களில் சாதி ரீதியான தாக்குதல், மத ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற தாக்குதல் அதிகம் நடக்கும்.. அதேபோல தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் சாதி, மத ரீதியான தாக்குதல் நடந்தேறி வருகிறது.
அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தலித் மாணவனை கையால் மலம் அள்ள வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. ராஜசேகர் என்பவர் மலம் கழிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவனை சாதிப் பெயரைச் சொல்லி தாக்கியதாகவும், மலத்தை கையால் அள்ள சொல்லி முகத்தில் அடித்து துன்புறுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.