Categories
தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் தாக்குதல்… ஜெய்ஷ்-இ-முகமது சதி திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை..!!

புல்வாமா தாக்குதலை விட பயங்கரமான தாக்குதலை இந்தியாவின் 7 மாநிலங்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியது. இம்மசோதாவிற்கு இந்திய நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலக அளவிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக  சீனா மற்றும் பாகிஸ்தான் இம்மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற அவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுகையில்,  இந்தியாவின் செயல்பாட்டால் ஏற்கனவே நடைபெற்ற புல்வாமா தாக்குதல் போல் மீண்டும் இந்தியாவில் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எச்சரித்தார்.

Image result for jaish e mohammad flag

இதைத்தொடர்ந்து இந்திய உளவுத்துறை பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கண்காணித்து வந்தது. அதன் அடிப்படையில் இந்திய உளவுத் துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட  புல்வாமா தாக்குதலை விட மிக பயங்கரமான தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளது. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை அடுத்து குறிப்பிட்ட 7 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |