உக்ரைன் நாட்டின் சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 53 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஐந்து மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியு போல் நகரை ரஷ்ய படையினர் ஆக்கிரமித்த சமயத்தில் அவர்களிடம் சரணடைந்த உக்ரைன் நாட்டு வீரர்களை டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஓலெனிவ்கா என்ற சிறையில் அடைத்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று அந்த சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த, உக்ரைன் வீரர்கள் 53 பேர் உயிரிழந்ததாகவும், 75 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.