Categories
உலக செய்திகள்

“ஏமனில் கொடூரம்!”.. இராணுவ தலைமையகத்தில் ஏவுகணை தாக்குதல்.. குழந்தை உட்பட 17 பேர் பலி..!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ராணுவ தலைமையத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஏமன் அதிபரான மன்சூர் ஹாதியின் அரச படை மற்றும் ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கு இடையில் கடந்த ஆறு வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

எனவே ஐ.நா. மனிதாபிமான பேரழிவில் மிக மோசமான நாடாக ஏமனை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், ஏமனில் உள்ள மரிப் நகரத்தில் இருக்கும் ராணுவ தலைமையகத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஏவுகணை, இராணுவத் தலைமையகத்தின் வளாகத்தில் இருக்கும் எரிபொருள் நிரப்பக்கூடிய இடத்தில் விழுந்ததால் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது.

இதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதில் 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளது. மேலும் 5 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.  அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |