Categories
உலக செய்திகள்

மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 43 பேர் உயிரிழந்த சோகம்…. தகவல் வெளியிட்ட ஐ.நா…!!

சூடான் நாட்டிலுள்ள 46 கிராமங்களிலிருந்த பொருட்களை சூறையாடி விட்டு சென்ற மர்ம நபர்கள் அப்பகுதிகளை தீவைத்து எரித்துள்ளார்கள் என்று ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் டார்பர் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 46 கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் மேல் குறிப்பிட்டுள்ள 46 கிராமங்களின் மீது மர்ம நபர்கள் அதிரடியான தாக்குதலை நடத்திவிட்டு அப்பகுதியிலுள்ள பொருட்களை திருடி சென்றுள்ளார்கள்.

அதோடு மட்டுமின்றி 46 கிராமங்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளார்கள். இவ்வாறு மர்ம நபர்கள் 46 கிராமங்களின் மீது தாக்குதலை நடத்திய சம்பவத்தில் சுமார் 43 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள இந்த தகவலை ஐ.நா தெரிவித்துள்ளது.

Categories

Tech |