Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்றாங்க…. அதான் இப்படி ஆயிட்டு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

ஆற்றுக்குள் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து கிளியனூர் கிராமப்பகுதியில் வெண்ணாற்றின் கரையை குடைந்து மணல் அள்ளப்பட்டு இருப்பதனால் ஆற்றின் கரையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வெண்ணாற்றில் அதிக அளவில் சென்றது.

இந்நிலையில் கிளியனூர் ஆற்றின் கரையோரத்தில் மணல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. அப்போது கரையோரத்தில் இருந்த தேக்கு மரம் ஒன்று ஆற்றுக்குள் விழுந்தது .அங்கு ஆற்றின் கரையிலும் சிறிதளவு உடைப்பு காணப்படுகிறது. எனவே ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் கரையில் உடைப்பு ஏற்பட அபாயம் இருப்பதாக அந்த பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆற்றின் கரையோரத்தில் மணல் தோண்டி எடுத்ததே மண்சரிவு ஏற்படுவதற்கான காரணம் என்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |