இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளின் இன்டர்நெட் பேங்கிங், ATM, UPI சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கிகளின் இன்டர்நெட் பேங்கிங், UPI, ATM ஆகிய சேவைகள் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி வரை இயங்காது என வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கி யுடன் ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுவதால்,இந்த சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.