Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர்கள்… மடக்கிப் பிடித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் ராமமூர்த்தி நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியின் அருகில் அதற்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கி மற்றும் ஏடிஎம் மையத்திற்கு அதே பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிவலிங்கம் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏடிஎம் மையத்திற்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட சிவலிங்கம் உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது அங்கு இரண்டு பேர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து சிவலிங்கம் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்றுள்ளனர்.

இதனைப் பார்த்த ஏடிஎம் மையத்தில் இருந்த இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து ஒருவர் அங்கிருந்த மரத்தில் ஏறி உள்ளார். மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மரத்தை சுற்றி வளைத்து அவரை கையும், களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பதும், தப்பி ஓடியவரின் பெயர் விஜய் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த குற்றத்திற்காக சக்திவேலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் தப்பிச்சென்ற விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |