வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழ்க்கை பயணம் கிடையாது என்பதுதான். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக iMobile pay என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் இனி ஏடிஎம் செல்லும்போதே டெபிட் கார்டுகளை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. Imobile pay ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்து, ஏடிஎம் மையத்தில் ஸ்கேன் செய்து பணம் எடுக்க முடியும். அதன் மூலம் தினசரி 20 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம். இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.