Categories
தேசிய செய்திகள்

ATM மீது கயிறு கட்டி… காரில் இழுத்து சென்று கொள்ளை… அட்டகாசம் செய்த கொள்ளையர்கள் …!!

தெலுங்கானாவில் ஏடிஎம் இயந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்று 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிலாபாத் நகரில் புறவழிசாலையில் ஏடிஎம்இயந்திரம் உடைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம் என்றும், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை கார் மூலமாக கயிறு கட்டி இழுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம கும்பல் 30 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |