Categories
தேசிய செய்திகள்

“இனி மைனர்களுக்கும் ATM” தினமும் ரூ5,000 வரை…… SBI அசத்தல் அறிவிப்பு….!!

மைனர் வங்கிக் கணக்கிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. 

பிரபல எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பல வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும்  பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அது பெரும்பாலானோருக்கு பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது மைனர் என சொல்லப்படும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான  வங்கி கணக்கில் எஸ்பிஐ வங்கி கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி,

எஸ்பிஐ வங்கி குழந்தைகளின் உருவப்படம் பொறித்த ஏடிஎம் கார்டு வழங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மைனர் கணக்கு தொடங்குபவர்களுக்கு அவர்கள் உருவம் பொறித்த கார்டு இலவசமாக தரப்படும். இந்த கணக்கிற்கு 2.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கணக்கில் ரூபாய் ஐந்தாயிரம் வரை தினமும் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு அரசு சார்பில் தொடர்ச்சியாக அளிக்கப்படும் காலர்சிப் உள்ளிட்ட பணங்களை  மாணவர்கள் வங்கிக்கு சென்று சிரமப்பட்டு எடுக்காமல், இதுபோன்று ஏடிஎம் மூலம் எளிமையாக எடுத்துக் கொள்வதற்காகவும் ஏடிஎம் வங்கி கணக்கு உள்ளிட்டவை பற்றிய விவரங்களை சிறுவர்கள்  நன்கு அறிந்து பாதுகாப்புடன் செயல்படவே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |