பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்கள் திரு அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி உத்திரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக பாஜக மூத்த தலைவர்கள் திரு அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. செல்வி உமா பாரதி திரு கல்யாண் சிங் ஆகியோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் காணொளி வாயிலாக ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.