Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் விவசாயிகளுக்காக…. திறக்கப்பட்ட ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் … மகிழ்ச்சி செய்தி…!!

கரூர் விவசாயிகளின் விவசாயத்திற்காக ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கமானது நொய்யல் ஆற்றில் இருந்து வரும் உபரி நீர், கீழ் பவானி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர் மேலும் மழை நீர் ஆகியவற்றால் நிரம்புகிறது. க.பரமத்தி ஒன்றியம் கரூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம மக்களின் விவசாயத் தேவைகளுக்காகவும், குடிநீர்த் தேவைகளுக்கும் இந்த நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகவும், கீழ்பவானி கசிவு நீர், நொய்யல் ஆற்று நீரால் கடந்த 35 நாட்களுக்கு முன்பே இந்த நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து க.பராமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் விவசாயத்திற்காக விவசாயிகள் தண்ணீர் வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வினாடிக்கு 76 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு பின்பு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |