Categories
சினிமா தமிழ் சினிமா

அத்துமீறி அட்டகாசம் செய்யும் அசல்…. என்ன செய்தார் தெரியுமா?…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் வித்தியாசமான மற்றும் சுவாரசியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளரான ஜி.பி.முத்து தன் மகனை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி தானாக வெளியேறினார். இதனால் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்நிகழ்ச்சியில் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. இந்நிலையில் நெட்டிசன்களின் வெறுப்பை சம்பாதித்து வரும் போட்டியாளராக அசல் கோலார் இருக்கிறார்.

இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான் பார்வையாளர்களே முகம் செழிக்க வைக்கிறது. குயின்ஸ், மகேஸ்வரி என பெண் போட்டியாளர்களை இவர் தொட்டு தொட்டு பேசுவது ரசிகர்களை கடுமையான கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இந்த செயலுக்காக வீட்டை விட்டு வெளியேறுமாறு நெட்டிசன்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அசல் நிவாவிடம் நடந்து கொண்ட விதம் மேலும் ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளது. இந்த சீசனில் அசல் மற்றும் நிவாவிடையே காதல் இருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து நேற்றைய எபிசோடில் அசல் நிவாவே கடித்துள்ளார். நிவாவின் கையை கடித்து விளையாடிய அசலை பார்த்து நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். மேலும் இதனை இந்த வாரம் கமல் கண்டிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

Categories

Tech |