நடப்பு ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட்திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக மலையாள இளம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். மலையாளத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துவரும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையில் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக அவர் ஒரு பேட்டியில் குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து அப்படி கூறியதற்காக அவர் வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகியது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுவிட்டு திரும்பும்போது விமானத்தில் ஏறிய ஷைன் டாம் சாக்கோ, விமானிகள் அறை என அழைக்கப்படும் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கை எல்லைமீறல் என கருதப்பட்டு விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஆளான சாக்கோ, அங்கிருந்த மருத்துவமனையில் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார் என கூறப்படுகிறது. சிலமணி நேர விசாரணைக்குப் பின் அவரும், அவருடன் வந்திருந்த அவரது குடும்பத்தினரும் வேறு ஒரு விமானத்தில் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு நடிகர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..