Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உணவில் கலந்ததால்…. செத்து குவிந்த ஆடுகள்…. அதிர்ச்சியில் விவசாயிகள்….!!

மர்ம நபர்கள் உணவில் கலந்து வைத்த விஷத்தை ஆடு தின்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காமராஜர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயி நிலப் பகுதியில் பல்வேறு ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர்.

ஆனால் பல்வேறு பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு விவசாயி அதிர்ச்சியடைந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் உடனே ஆடுகளின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆடுகளில் உரிமையாளர் வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் வைத்த விஷம் கலந்த உணவை ஆடுகள் தின்றதால் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |