பொதுமக்கள் ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடைபாதையை மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவெனு ஹட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
அதன்படி அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் தீபக் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நடைபாதையில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.