அதிக பாரம் ஏற்றி சென்ற 10 வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியை தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்வதால் காவல்துறையினர் அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
இதனை அடுத்து அனுமதிக்கப்பட்டதை விட சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனால் அதிக பாரங்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் வாகனங்களுக்கு தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.