நாகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் சொந்த செலவில் கிடங்கு அமைத்துக் கொடுத்த விவசாயிகள் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீதிகளில் நெல்லைக் கொட்டி காத்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கிடங்கு அமைத்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை திறக்கவில்லை. இதனால் வீதிகளில் நெல்லை குவித்து வைத்து காத்துக் கொண்டுள்ளனர். மழையால் மகசூல் குறைந்த நிலையில் தங்களுக்கு போதிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.