Categories
கால் பந்து விளையாட்டு

அதிக வருமானம் பெறும் பட்டியலில்…. நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடம் ….!!!

கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 2021-2022 -ம் ஆண்டு சீசனில் வருமானம் ரூபாய் 922 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டில் நட்சத்திர வீரர்களாக போர்ச்சுக்கல்லை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்சியும் திகழ்ந்து வருகிறார்கள். இருவருமே  அதிக ரசிகர் பட்டாளத்தை  கொண்டுள்ளனர் .இதில் மெஸ்சிக்கு பார்சிலோனா அணி அதிகம் சம்பளம் கொடுத்து வந்தது. அதேபோல் ரொனால்டோவுக்கும்  ரியல் மாட்ரிட் அணி அதிக சம்பளம் கொடுத்து வந்தாலும்,  மெஸ்சியை விட குறைவாகத்தான் வாங்கினார்.அதோடு வணிக ஒப்பந்தம் உட்பட இதர வருமானத்திலும் மெஸ்சி முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்சி பி.எஸ்.ஜி.அணிக்கு சென்றதால் அவருடைய வருமானம் குறைந்துள்ளது. இந்நிலையில் 2021 – 2022 சீசனில் மெஸ்சியை விட அதிக வருமானம் பெறும் நபராக கிறிஸ்டியானோ ரொனால்டோ இருப்பார் என பிரபல போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது .மேலும் ஊதியம், போனஸ், விளம்பரம் மூலம் கிடைக்கும் மொத்த தொகை ரூபாய் 922 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .

Categories

Tech |