நடிகர் அமிதாப்பச்சனிடம், இன்ஸ்டாகிராமில் ஏன் நீங்கள் அதிகமான பாலோயர்களை பெறவில்லை? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்தார்.
கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரை அரங்குகள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைத்து திரை நட்சத்திரங்களும் வீட்டிற்குள் அடைந்துள்ளதால் அவர்கள் உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, பாடுவது, ஆடுவது, என அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்து குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கின்றனர்.
இப்பதிவில் அவர் கூறியது என்னவென்றால்;
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ஏன் இளம் தலைமுறையினரைப் போன்று அதிகமான பாலோயர்களைப் பெறவில்லை என்று ஒரு நபர் என்னிடம் விளக்கம் கேட்டார். அதற்கு நான் பிகினி புகைப்படங்களை பதிவிடுவதில்லை என்பது தான் முக்கிய கரணம். அதனால், இந்த புகைப்படத்தைப் பதிவு செய்கிறேன். இது ஒரு உண்மையான பிகினி புகைப்படமல்ல. என்னுடைய ‘மகான்’ படத்தில் இடம் பெற்ற ஒரு புகைப்படம். அப்படம் வெளிவந்து இன்றுடன் 37 வருடங்கள் ஆகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/B_iJeFpBFDU/