Categories
உலக செய்திகள்

நான் உற்சாகமான வீரன்….! ”இன்னும் அதிக பலி ஏற்படும்” டொனால்டு டிரம்ப் ..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் இருக்கும் ஹனிவெல் தொழிற்சாலையை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை தயாரிக்கும் ஹனிவெல் தொழிலாளர்களை அதிபர் பாராட்டியதோடு முன்னோக்கி பார்க்க வேண்டிய நேரம் இது என வலியுறுத்தி நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர் சமூக விலகல் நடவடிக்கைகளை நீக்குவதும், மூடப்பட்டிருக்கும் பொருளாதார அமைப்புகளை மறுபடியும் திறப்பதும் அதிக இறப்பு எண்ணிக்கைக்கு  காரணமாக அமைந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |