மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, நேரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருந்தபோதே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்த நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நானியுடன் சேர்ந்து நடித்த ஆண்டே சுந்தராணிக்கி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து நடிகை நஸ்ரியா தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா ஸ்கை டைவிங் செய்யும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தன்னுடைய கனவு நனவானதாகவும், இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை நஸ்ரியாவின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.