கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து ஐயப்பனை தரிசிக்கிறார்கள். கடந்த 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதன்பிறகு வருகிற 30-ம் தேதி வரை 8,79,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 89,530 பேர் சாமி தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். கடந்த சனிக்கிழமை 78,000 பேர் சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், இன்று 71,000-க்கும் மேற்பட்டோர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். மேலும் இன்று காலை 9 மணி வரை 29,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.