கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேனம்விளை பகுதியில் பால் மகேர் பாலால் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் சிவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவருக்கும் சென்னையில் ஐடி ஊழியராக வேலை பார்க்கும் ஆர்த்தி சுரேஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்ற நிலையில் மண்டபத்தில் வைத்திருந்த ஒரு பேனர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது மணமகனின் நண்பர்களின் சார்பில் 90ஸ் கிட்ஸ் என்ற தலைப்பில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனர் பிரபல தினசரி நாளிதழ் வடிவில் இருந்தது. அந்த பேனரில் எழுதப்பட்டிருந்ததாவது, கல்யாண சம்பந்தம் விலக்குவோருக்கு எதிரான போராட்டம். எதிரொலி 90ஸ் கிட்ஸ். திருமணத்தால் சேனம்விளை அருகே பரபரப்பு. அதிர்ச்சியில் மக்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அதோடு அண்ணன் திருமணத்திற்கு பணம் கேட்டதால் மணமகன் தம்பி தலைமறைவாகி விட்டதால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக 6 பேர் கொண்ட குழு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் 90ஸ் கிட்ஸ்களின் வித்தியாசமான போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.