‘குஷி’ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குஷி”.
இந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். காதல் கதைகளத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் சுமார் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.