சென்னையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை கொள்முதல் செய்ததில் ரூ 1,480 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசனில், 1,480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது குறித்து, அறப்போர் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அதில், சென்ற 4 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் மூலமாக சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட போது ஊழல் நடைபெற்றதை ஆதாரங்களுடன் சிபிஐக்கு அளித்துள்ளோம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இந்த ஊழலில் பங்குள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே கொள்முதல் செய்யும்படியாக ஏற்பாடுகள் செய்து,2018 இல் நடைபெற்ற டெண்டரில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற நிலையிலும், 2019 ஆம்ஆண்டு டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கேற்கும்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. என்று தெரிவிக்க இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்ல போகிறார் என்று கேள்வி எழுப்பியும் உள்ளது.