உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசி, 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
உலக கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 96 ரன்கள் குவித்தார். முக்கிய வீரர்கள் ரன்கள் குவிக்காத நிலையில் சிறப்பாக ஆடி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
உலகக்கோப்பை போட்டியில் பாபர் அசாம் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம் 1 சதம் உட்பட 474 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் இவர் பாகிஸ்தான் அணிக்காக உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த ஜவேத் மியான்தத் சாதனையை முறியடித்துள்ளார்.
1992-ல் நடந்த உலக கோப்பையில் ஜவேத் மியான்தத் 437 ரன்கள் அடித்ததே பாகிஸ்தான் அணிக்காக ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வந்தது. தற்போது இந்த உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசியதால் 27 ஆண்டுகளாக இருந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.