விவசாயின் வீட்டில் அமித்ஷா அமர்ந்து உணவருந்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார்.
இதையடுத்து அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு அமித்ஷா உணவு அருந்தியுள்ளார். அப்போது அமித்ஷாவுடன் பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியாவும் உடன் இருந்துள்ளார். விவசாயி வீட்டில் அமித்ஷா கீழே அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.