Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாமுண்டீஸ்ஸ்வரி கோவிலில்…. கேட்…. உண்டியலை உடைத்து திருட்டு….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த வீராணம் குப்பம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், நாள் தோறும் சிறப்பு பூஜைகள் இன்று வரை நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பூஜைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின் காலையில் வந்து பார்த்த பொதுமக்களும் பூசாரியும் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும்,  உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கோவிலை சுற்றிப் பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |