சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டம் மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தி என்பவரது வீட்டில் அதிகாலை நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை கண்டதும் அவர்கள் தப்பி சென்றனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் காவல்துறையினரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், அவரது இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.