ஜெனீவாவில் நடைபெற்ற 43 வது ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் தொட்டில் என்று இந்தியா சாடியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை குலைத்து மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக விளங்கும் தீவிரவாதம் குறித்து இந்தியா புகாரளித்துள்ளது.கடந்த ஏழு மாதங்களாக காஷ்மீரில் ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நடத்தி வருவதாக இந்தியாவின் முதன்மை செயலர் விமராஷ் விமர்ஷ் ஆரியன் (Vimarsh Aryan) தெரிவித்துள்ளார்.
மேலும் தேநீர் கோப்பைக்குள் புயலை எழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும், இது பாகிஸ்தானுக்கான தேநீர் கோப்பை அல்ல என்றும், தீவிரவாதத்தின் தொட்டில் பாகிஸ்தான் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.