சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செய்கிறார்கள். அதன் பிறகு மாற்றுத்திறனாளி நபர்களும் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் மாற்றுத்திறனாளிகளால் கடலில் கால்களை அனைத்து ரசித்து மகிழ்ந்து விளையாட முடியவில்லை.
இதன் காரணமாக மாற்றுத்திறனாளி பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் மற்றவர்களை போன்று கடல் அலையில் நனைந்து அருகில் இருந்து பார்க்குமாறு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர நடைபாதை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1.14 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதால் இன்று முதல்வர் ஸ்டாலின் அதை திறந்து வைக்கிறார்.